/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் கோளாறு பொம்மிடியில் ரயில்வே பயணிகள் தவிப்பு
/
டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் கோளாறு பொம்மிடியில் ரயில்வே பயணிகள் தவிப்பு
டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் கோளாறு பொம்மிடியில் ரயில்வே பயணிகள் தவிப்பு
டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் கோளாறு பொம்மிடியில் ரயில்வே பயணிகள் தவிப்பு
ADDED : செப் 21, 2025 01:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி :பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், தொழில்நுட்ப கோளாறால், சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும், செல்ல, பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் சாதாரண டிக்கெட் முதற்கொண்டு, முன்பதிவு டிக்கெட், தட்கலில் முன்பதிவு செய்யப்படுகிறது. நேற்று அதிகாலையில், ரயில்வே ஸ்டேஷனில் தொழில்நுட்ப கோளாறால், டிக்கெட் வழங்கும் பணி முடங்கியது.
இதனால் நேற்று அதிகாலை முதல், ரயில் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். காலை ஈரோடு - ஜோலார்பேட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலுக்கு சென்ற பயணிகளுக்கு, கையால் எழுதி டிக்கெட் கொடுக்கப்பட்டது. காலை, 8:00 மணிக்கு தொடங்கும் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் எடுக்க பயணிகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. ஆனாலும், தொழில்நுட்பக் கோளாறால் முன்பதிவு, தட்கல் டிக்கெட் பெற முடியாமல் பயணிகள் தவித்தனர்.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் பணி பாதித்தது. பின் நேற்று மதியம், 1:30 மணிக்கு கோளாறு சரிசெய்யப்பட்டது. அதன்பின் தட்கல் முறை மற்றும் முன் பதிவு உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்தது. பயணிகளுக்கு தடங்களின்றி டிக்கெட் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.