/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு
/
பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு
ADDED : நவ 15, 2024 02:20 AM
பகலில் பெய்த மழை
வியாபாரிகள் பாதிப்பு
குமாரபாளையம், நவ. 15-
குமாரபாளையத்தில், சாலையோர கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. வெயிலும் அடித்துக்கொண்டு இருந்தது. திடீரென வானில் கரு மேகங்கள் சூழ்ந்து நேற்று மதியம், 2:30 மணியளவில் கன மழை பெய்தது. இந்த மழை இரண்டு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, கோம்புபள்ளத்தில் அதிகளவில் மழை நீர் சென்றது. திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
* நேற்று காலை முதல், நாமகிரிப்பேட்டையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 1:30 மணியளவில் காற்றுடன் மழை பெய்தது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை பெய்தது. 20 நிமிடத்துக்கு மேல் மழை பெய்தது. சில இடங்களில் மாலை வரை சாரல் மழை பெய்தது.