ADDED : நவ 14, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, ந நாமகிரிபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில், சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெயில் வாட்டி வந்தது. நேற்று நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பிலிப்பாக்குட்டை, கார்கூடல்பட்டி, மெட்டாலா உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன்
காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணியளவில் பிலிப்பாகுட்டை, நாரைகிணறு, காமராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. அரைமணி நேரம் காற்று இல்லாமல் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வயல், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் நேற்று மாலை இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

