/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை
/
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை
ADDED : நவ 14, 2025 02:21 AM
திருச்செங்கோடுதிருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில், நகர பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்செங்கோடு நகர பகுதிகளை சேர்ந்த, 87 பூத் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது: எஸ்.ஐ.ஆர்., திருத்த படிவங்களை அதிகாரிகள் வழங்கும்போது, அ.தி.மு.க., முகவர்களும் உடன் சென்று ஒவ்வொரு ஓட்டும் விடுபடாமல், சேர்ப்பதற்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.
ஒரு வார்டுக்கு, 200 போலி ஓட்டுகள் கட்டாயம் இருக்கும். இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் அது போன்ற ஓட்டுகளை நீக்க அதிகாரிகளோடு இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தின் முதல்வராக இ.பி.எஸ்.,ஐ மீண்டும் அரியணையில் அமர்த்த அனைவரும் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு பேசினார்.இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் பொருளாளர் பரணிதரன், நாமக்கல் மாவட்ட துணை செயலர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

