/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்த பின் தற்கொலை செய்து கொண்ட வீடியோகிராபர்
/
வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்த பின் தற்கொலை செய்து கொண்ட வீடியோகிராபர்
வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்த பின் தற்கொலை செய்து கொண்ட வீடியோகிராபர்
வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்த பின் தற்கொலை செய்து கொண்ட வீடியோகிராபர்
ADDED : நவ 14, 2025 02:05 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஐந்துபனை பகுதியில் வசித்த வீடியோகிராபர், கடன் கொடுத்தவர்கள் தந்த நெருக்கடியால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், வீடியோவில் தனது தற்கொலைக்கு காரணம் யார் என, வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஐந்து பனை பகுதியை சேர்ந்த நந்தகோபால், 42; வீடியோகிராபர். இவருக்கு திருமணமாகவில்லை. சேலத்தில் தினேஷ், ஹரி இருவரும் சேர்ந்து நடத்தும் ஸ்டுடியோவில், நந்தகோபால் வேலை செய்து வந்துள்ளார்.
நந்தகோபாலுக்கு, தினேஷ், ஹரி ஆகியோர் கடன் கொடுத்துள்ளனர். மேலும் சிலரிடம் கடன் வாங்கியும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை நந்தகோபால் கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தினேஷ், ஹரி ஆகியோர் பணம் கேட்டு நந்தகோபாலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நந்தகோபால், தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், வீடியோவில் தன் தற்கொலைக்கு யார் காரணம் என, வாக்குமூலம் ஒன்றை தன்னுடைய அலைபேசியில் பதிவு செய்து வெளி யிட்டுள்ளார்.
அதில், தன் சாவுக்கு காரணம் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர் ஹரி என, குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துவிட்டு, நேற்று அதிகாலை நந்தகோபால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, நந்தகோபால் சடலத்தை பள்ளிப்பாளையம் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தினேஷ், இறந்து போன நந்தகோபாலிடம் பேசும் ஆடியோவில், 'நீ உடனடியாக 2 லட்சம் ரூபாயாவது தயார் செய்து தர வேண்டும். பள்ளிப்பாளையத்தில் கிட்னி விற்பனை அதிகமாக நடைபெறுகிறது.
எனவே, உனது கிட்னியை விற்றாவது, நீ எங்களுக்கு பணம் தர வேண்டும்' என, வலியுறுத்தி பேசும் ஆடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ, ஆடியோ பதிவை வைத்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

