/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் ரூ.9.15 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதிக்கு அடிக்கல்
/
நாமக்கல்லில் ரூ.9.15 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதிக்கு அடிக்கல்
நாமக்கல்லில் ரூ.9.15 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதிக்கு அடிக்கல்
நாமக்கல்லில் ரூ.9.15 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதிக்கு அடிக்கல்
ADDED : நவ 14, 2025 01:41 AM
நாமக்கல், நாமக்கல் நகரில் ரூ.9.15 கோடி மதிப்பில், பணிபுரியும் பெண்களுக்கான தோழி ஹாஸ்டல் கட்டடத்திற்கு, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 9.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக, தோழி மகளிர் விடுதி கட்டுமான பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நாமக்கல்-ஃ
திருச்சி சாலையில் உள்ள, பழைய கால்நடை மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், தோழி ஹாஸ்டல் கட்டப்பட உள்ள இடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.
எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மகளிர் விடுதி கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பழைய அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில், 1,320 சதுர மீட்டர் பரப்பளவில் தோழி மகளிர் விடுதி அமைய உள்ளது. பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு தரை தளம் மற்றும் 4 தளத்துடன், 100 பேர் தங்குவதற்கான அறைகள் அமைக்கப்படுகிறது. 36 பெண்கள் தங்கும் வகையில், இரு படுக்கைகள் கொண்ட அறை 18ம், 64 பேர் தங்கும் வகையில், 4 படுக்கைகள் கொண்ட அறைகள் 16ம் அமைக்கப்பட உள்ளது. மேலும் படிப்பதற்காக தனி அறை, கம்ப்யூட்டர் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான அறை, சலவை இயந்திரத்துடன் கூடிய சலவை அறை, சோலான் மின் வசதி, செக்யூரிட்டி வசதி, டூ வீலர் மற்றும் 4 வீலர் பார்க்கிங் வசதியுடன் இந்த ஹாஸ்டல் அமைக்கப்பட உள்ளது.

