/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் மழை சீக்குப்பாறை வியூபாயின்ட் செல்ல தடை
/
கொல்லிமலையில் மழை சீக்குப்பாறை வியூபாயின்ட் செல்ல தடை
கொல்லிமலையில் மழை சீக்குப்பாறை வியூபாயின்ட் செல்ல தடை
கொல்லிமலையில் மழை சீக்குப்பாறை வியூபாயின்ட் செல்ல தடை
ADDED : ஜன 09, 2024 11:31 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. விடுமுறை நாட்களில், இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இதில், அனைவரும் விரும்பும் இடமாக, வாழவந்திநாடு பஞ்., செம்மேடு அடுத்த, 4 கி.மீ., துாரத்தில், 'சீக்குப்பாறை வியூபாயின்ட்' அமைந்துள்ளது. இங்கிருந்து பார்த்தால், மலையடிவார பகுதியில் உள்ள காரவள்ளி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட ஊர்களின் அழகை கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில், சீக்குப்பாறை வியூபாயின்டில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கண்டுகளிக்க வசதியாக, சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணி தொடங்கியது. விரிவாக்கப்பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதாலும், நேற்று, தொடர் மழை பெய்ததாலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, சீக்குப்பாறை வியூபாயின்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து, வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.