நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலை முதல் பெய்த துாறல் மழையால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, கவுண்டம்பாளையம், மூலப்பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதியில், நேற்று மாலை முதல் துாறல் மழை பெய்ய தொடங்கியது. காற்றுடன் தொடங்கிய துாறல் மழை இரவு, 10:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரவும் தொடர்ந்த மழையால் இப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், இப்பகுதி சாலை, வயல்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.