/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு:வீடுகளுக்குள் புகுவதால் அவதி
/
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு:வீடுகளுக்குள் புகுவதால் அவதி
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு:வீடுகளுக்குள் புகுவதால் அவதி
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு:வீடுகளுக்குள் புகுவதால் அவதி
ADDED : செப் 29, 2025 01:55 AM
வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சிறிய அளவில் மூன்று நீர்தேக்க குட்டைகள் உள்ளன. மழை காலங்களில் அந்த குட்டைகள் நிரம்பி, அதில் இருந்து வெளியேறும் மழை நீர் செல்வதற்கு வழியின்றி ஆக்கிரமித்துள்ளதால், எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மழைநீர் கால்வாயை, அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்து, சிமென்ட் சிலாப் அமைத்து மூடிவிட்டனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் சிறிய அளவு மழை பெய்தால் கூட மழைநீர் செல்ல வழியின்றி எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு பகுதியில் தேங்குவதோடு மட்டுமில்லாமல் வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது. எனவே, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.