/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் தேக்கம் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
/
சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் தேக்கம் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் தேக்கம் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் தேக்கம் அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
ADDED : நவ 03, 2024 01:20 AM
சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் தேக்கம்
அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
பள்ளிப்பாளையம், நவ. 3-
பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை, சோழசிராமணி, மொளசி, தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆயக்காட்டூர் உள்ளிட்ட முக்கிய பகுதிக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த சுரங்கப்பாதையில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி மோட்டார், சில ஆண்டாக செயல்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்தால், சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது.
கடந்த, 22ல் பெய்த மழையால், காவிரி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அப்போது தனியார் கல்லுாரி பஸ் ஒன்று சிக்கிக்கொண்டது. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில், தானியங்கி மோட்டாரை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் புதிதாக தானியங்கி மோட்டார் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தானியங்கி மோட்டார் அமைக்கவில்லை. பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, 15 நிமிடம் மழை பெய்ததால், காவிரி சுரங்கப்பாதையில் மீண்டும் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழைநீர் உடனுக்குடன் வெளியேறும் வகையில் தானியங்கி மோட்டாரை வைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக விட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.