ADDED : மார் 17, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில், 500 ஹெக்டேருக்கு மேல் மானாவாரியாகவும், பாசன முறையிலும் கடலை விதைத்துள்ளனர். கார்த்திகை பட்டத்தில் விதைத்த கடலைக்கு, தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதை பயன்படுத்தி, மானாவாரி விவசாயிகள் கடலையை அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது, பச்ச கடலை, 62 கிலோ மூட்டை, 2,300 ரூபாயிலிருந்து, 2,500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
காய்ந்த கடலை, 46 கிலோ மூட்டை, 3,000 ரூபாயிலிருந்து, 3,200 ரூபாய் வரை விற்பனையாகிறது. ராசி-புரம், நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, மெட்டாலா உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயிகள், மண் காய்வதற்குள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.