ADDED : மே 23, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொப்பப்பட்டி கிராம காங்., கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது திருவுருவப்
படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இளைஞர் காங்., மாநில செயலரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமான அருளானந்தம், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் ராஜிவ் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
வட்டார தலைவர்கள் இளங்கோ, ஷேக் உசேன், மாவட்ட பொதுச்செயலர் மயில்சாமி, வெண்ணந்துார் பிரகாஷ், ஊடகப்பிரிவு சேட்டு உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர், தொடர்ந்து, ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு, கிராமங்கள்தோறும் காங்கிரசை வளர்ப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.