/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் வராததால் ராஜ்வீதி மக்கள் அவதி
/
குடிநீர் வராததால் ராஜ்வீதி மக்கள் அவதி
ADDED : அக் 02, 2025 02:23 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி, 4வது வார்டுக்குட்பட்ட ராஜ்வீதி பகுதியில் தண்ணீர், கடந்த, 5 நாட்களாக வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் செந்தில் கூறியதாவது: ராஜ்வீதி பகுதியில் குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில், கடந்த, ஐந்து நாட்களாக தண்ணீர் வரவில்லை.
இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தண்ணீர், ஐந்து நாட்களாக வராததால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்த நகராட்சி அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. அலட்சியம் செய்யாமல் தினமும் சீராக தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.