/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழா
/
ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2025 01:55 AM
குமாரபாளையம், குமாரபாளையம் பா.ஜ., சார்பில் ராணி ஹகில்யா பாய் ஹோல்கர், 300வது பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாநில சுற்றுச்சூழல் தலைவர் கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர். ராணி ஹகில்யா பாய் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் ராணியாக ஆட்சி செய்த ராணி ஹகில்யா பாய் ஹோல்கர், பெண்ணுரிமைக்காக போராடியவர். உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கைவிட வலியுறுத்தி, தன் ராஜ்ஜியத்தில் அதனை செயல்படுத்தினார். பெற்றோர் சொத்தில், மகள்களுக்கு உரிமை உண்டு என்பதை செயல்படுத்தினார்.இதுபோன்ற எண்ணற்ற பெண்ணுரிமைகளை, பெற்றுத்தந்த ராணி ஹகில்யா பாய் ஹோல்கர் புகழ் பற்றி, சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் எடுத்துரைத்தனர். முன்னாள் மாவட்ட பொதுச்செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், நகர தலைவர் வாணி, மாவட்ட துணை தலைவர் புவனேஸ்வரி, உள்பட பலர் பங்கேற்றனர்.