/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்: ரத்து செய்யக்கோரி மனு
/
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்: ரத்து செய்யக்கோரி மனு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்: ரத்து செய்யக்கோரி மனு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம்: ரத்து செய்யக்கோரி மனு
ADDED : ஜூலை 27, 2024 12:47 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, வேறு பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, நக-ராட்சியில் கடந்த, 5ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நி-லையில், புதிய பஸ் ஸ்டாண்ட், ராசிபுரம் ஒன்றியம், அணைப்பா-ளையம் பகுதியில் வர உள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு, அ.தி.மு.க., - ம.தி.மு.க., - வி.சி., - ம.நீ.ம., - கம்யூ., கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இவர்கள் அனைவரும், 'ராசி-புரம் நகர பேருந்து நிலைய மீட்டு கூட்டமைப்பு' என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கடைய-டைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, புதிய பஸ் ஸ்டாண்-டிலிருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் நகராட்சி அலுவல-கத்தில் இதற்கான மனுவை வழங்கினர். ஊர்வலத்தின்போது, நக-ராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
வி.சி., கவுன்சிலர் வாக்குவாதம்ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யக்-கோரி, 'ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு' நிர்-வாகிகள் மனு அளித்தனர். முன்னதாக ஊர்வலமாக சென்றனர். அப்போது, நகராட்சி கவுன்சிலர்களை, 'மானங்கெட்டவர்கள்' என்ற பொருளில் கோஷமிட்டபடி சென்றனர். இதை சில கவுன்சி-லர்கள் கவனித்தனர். முடிவில், நகராட்சி அலுவலகம் வந்தவர்க-ளிடம், வி.சி., கவுன்சிலர் பழனிசாமி மற்றும் தி.மு.க., நிர்வா-கிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'மானங்கெட்ட-வர்கள்' என, பேசியதற்கு வழக்கு தொடருவோம் எனக்கூறி-யதால், பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அங்கிருந்த கூட்-டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் அங்கிருந்த நழுவினர்.

