/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 08, 2025 01:30 AM
ராசிபுரம்;ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின், 2025--26-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. தலைவராக சுரேந்திரன், செயலாளராக மஸ்தான், பொருளாளராக ஜெயக்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்க முன்னாள் தலைவர் முருகானந்தம் வரவேற்று பேசினார். மண்டல உதவி ஆளுநர் அன்பழகன், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து, வாழ்த்தி பேசினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநரும், ஆலோசகருமான சுந்தரலிங்கம் சேவை திட்டங்கள் குறித்து பேசினார்.
விழாவில், ராசிபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 20,000 ரூபாய் மதிப்பில் யு.பி.எஸ்., ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 20,000 ரூபாய் மதிப்பில், ஸ்ட்ரெச்சர், வீல் சேர், 20,000 ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 3 பேருக்கும், ஏழை பெண்கள் இருவருக்கு, 16,000 ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரம் உள்பட மொத்தம், 2.46 லட்சம் ரூபாய் மதிப்பில் சேவை திட்டங்கள் வழங்கப்பட்டன.