ADDED : செப் 13, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இந்த முகாம் மூலம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்கலாம். மேலும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தும் பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.