/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 8 தாலுகாவில் ரேஷன்தாரர் குறைதீர் முகாம்
/
மாவட்டத்தில் 8 தாலுகாவில் ரேஷன்தாரர் குறைதீர் முகாம்
மாவட்டத்தில் 8 தாலுகாவில் ரேஷன்தாரர் குறைதீர் முகாம்
மாவட்டத்தில் 8 தாலுகாவில் ரேஷன்தாரர் குறைதீர் முகாம்
ADDED : அக் 12, 2025 02:46 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க, மாதந்தோறும் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த மாதத்திற்கான பொது வினியோக திட்ட குறை-தீர்க்கும் முகாம் நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபா-ளையம் ஆகிய தாலுகாவில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலகங்-களில் நேற்று நடந்தது.நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் அலுவலகத்தில், தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் முகாம் நடந்தது. அதில், 16 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அவை அனைத்தும் தீர்வு காணப்பட்டது. அதேபோல், மாவட்டம் முழு-வதும், 80 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது.