/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுதந்திர போராட்ட வாரிசுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கல்
/
சுதந்திர போராட்ட வாரிசுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கல்
சுதந்திர போராட்ட வாரிசுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கல்
சுதந்திர போராட்ட வாரிசுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 12, 2025 02:46 AM
ராசிபுரம்: காந்தியின் கொள்கைகளை கடைபிடித்து வரும், சுதந்திர போராட்ட வாரிசு சிதம்பரம் கந்தசாமிக்கு கவர்னர் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலசங்கத்தின் தலைவர் மற்றும் காந்தி ஆசிரம தலைவரான சிதம்பரம் கந்தசாமி தொடர்ந்து காந்திய கருத்து களை வலியுறுத்தி வருவதுடன், அவர் பாதையில் நடந்து வருகிறார். இவருக்கு தமிழக கவர்னர் ரவி பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். அதில், 'மகாத்மா காந்தியின் போதனைகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை எதிர்கால சந்ததியினருக்கு முன்னெடுப்பதில் சிதம்பரம் கந்தசாமி முன் மாதிரியாக உள்ளார். இந்த உள்ளார்ந்த ஈடுபாடு, அர்ப்ப-ணிப்பு நமது சமூகத்தில் ஆழமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்-படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத கொள்-கைகளான அகிம்சை, உண்மை, சுய ஒழுக்கம், சேவை ஆகிய-வற்றை மேம்படுத்துவதற்கும், இணக்கமான மற்றும் சமத்துவ-மான சமூகத்தை வளர்ப்பதற்கு, நீங்கள் ஆற்றிய பங்களிப்புக-ளுக்கு பாராட்டை தெரிவிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். பின்னர், இதற்கான சான்றிதழை சிதம்பரம் கந்தசாமியிடம் கவர்னர் ரவி வழங்கினார்.