/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்; ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் கோரிக்கை
/
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்; ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் கோரிக்கை
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்; ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் கோரிக்கை
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்; ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 21, 2024 07:27 AM
நாமக்கல்: ஆல் மோட்டர் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில், மகாசபை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் சென்னிமலை தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் திருப்பதி, கவுரவ தலைவர் வெங்கட்ராமன், ஆலோசகர் பூபதி, மெக்கானிக்கல் ஒர்க்ஷாப் ஒனர்ஸ் அசோசியேஷன் தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மின்சார கட்டண உயர்வால் ஒர்க்ஷாப் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, நாமக்கல் நகரில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையம், பெரியப்பட்டி சாலையில் இயங்கி வருகிறது. நகரின் உட்புறத்தில் அமைந்துள்ளதால், தீ விபத்து அபாயம் ஏற்படும்போது தீயணைப்பு வாகனம் வீதிகளின் வழியாக வந்து, மெயின் சாலையை அடைவதற்கு, அரை மணிநேரமாகிறது. தீ விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்குள் பேரிழப்பு ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகம் அல்லது முக்கிய சாலை அருகில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

