/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடைகள், நிறுவன விபரங்கள் பதிவு தொழிலாளர் நலத்துறை அறிவுரை
/
கடைகள், நிறுவன விபரங்கள் பதிவு தொழிலாளர் நலத்துறை அறிவுரை
கடைகள், நிறுவன விபரங்கள் பதிவு தொழிலாளர் நலத்துறை அறிவுரை
கடைகள், நிறுவன விபரங்கள் பதிவு தொழிலாளர் நலத்துறை அறிவுரை
ADDED : செப் 20, 2024 02:41 AM
நாமக்கல்: நாமக்கல் தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், 2024 ஜூலை 2-க்கு பிறகு புதியதாக தொடங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களில், 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ள அவற்றின் உரிமையாளர்கள் இத்துறையின், https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுக் கட்டணமாக, 100 ரூபாய் செலுத்தி ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவு சான்றிதழ் அதற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 2024 ஜூலை 2-க்கு முன், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள், பதிவு கட்டணமின்றி இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.