ADDED : மே 16, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாப்பில், 100 ஆண்டு பழமைவாய்ந்த ஆலமரம் அகற்றப்பட்டதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி பஞ்,,ல், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கானோர் நாமக்கல், துறையூர் உள்ளிட்ட பகுதி
களுக்கு வேலைக்கு செல்ல, இங்குள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வந்தனர். முதியவர்கள், பள்ளி மாணவ மாணவியர் பஸ்சிற்காக காத்திருக்கும் போது, அமர்வதற்கு இருக்கைகள் இல்லாத நிலையிலும், ஆலமரத்தை நிழலாக பயன்படுத்தி அமர்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஆலமரம் அகற்றப்பட்டதால், பொது மக்கள், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வேதனை அடைந்தனர்.