/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் 2வதுக்குழு வகுப்பு துவக்க விழா
/
ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் 2வதுக்குழு வகுப்பு துவக்க விழா
ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் 2வதுக்குழு வகுப்பு துவக்க விழா
ரெங்கேஸ்வரா நர்சிங் கல்லுாரியில் 2வதுக்குழு வகுப்பு துவக்க விழா
ADDED : அக் 28, 2024 05:06 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில், ரெங்கேஸ்வரா கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. அதன் அங்கமான ரெங்கேஸ்-வரா நர்சிங் கல்லுாரியின், இரண்டாவது குழு
வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் வக்கீல் சரவணன் தலைமை வகித்தார். முதல்வர் நற்றமிழ் வரவேற்றார். செயல் இயக்குனர் சுப்ரமணி, செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் சிகரம் மருத்துவ-மனை இயக்குனர் டாக்டர் ரம்யா, சிறப்பு விருந்தினராக பங்-கேற்று பேசியதாவது:செவிலியர் என்பவர், நோயாளிகளிடம் வேற்றுமை பாராமல், கனிவான பேச்சுடன், இன்முகத்தோடு, 24 மணி நேரமும் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். ஒழுக்கம், சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். குழந்தை-களின் மனப்பாங்கிற்கு ஏற்றபடி, சேவைபுரிய வேண்டும். குறிப்-பாக சுறுசுறுப்புடனும், எப்பொழுதும் புத்துணர்ச்சியுடனும், நேர மேலாண்மையை கடைப்பிடித்து, தைரியத்துடன் பணியாற்ற வேண்டும். நம் நாட்டிலேயே செவிலியர் தேவை அதிகம் உள்-ளதால், அயல் நாட்டில் பணிக்கு செல்வதை தவிர்த்து, நம் மக்க-ளுக்கு சேவை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, கல்வி அறக்கட்டளை அறங்காவ-லர்கள், கல்வியியல் கல்லுாரி முதல்வர், உதவி பேராசிரியர்கள், ஓட்டுனர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.

