/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொடிவேரியில் தடுப்பு கம்பிகள் சீரமைப்பு; இன்று முதல் அனுமதி
/
கொடிவேரியில் தடுப்பு கம்பிகள் சீரமைப்பு; இன்று முதல் அனுமதி
கொடிவேரியில் தடுப்பு கம்பிகள் சீரமைப்பு; இன்று முதல் அனுமதி
கொடிவேரியில் தடுப்பு கம்பிகள் சீரமைப்பு; இன்று முதல் அனுமதி
ADDED : நவ 05, 2025 01:52 AM
கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணை பகுதியில் கடந்த அக்.,18ல், பலத்த மழையால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மறுநாள் முதல் சுற்றுலா பயணிகள், தடுப்பணைக்குள் நுழைய, குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அருவியில் குளிக்கும் பகுதியில், சுற்றுலா பயணிகள் பிடித்து நிற்க வசதியாக பதிக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு சேதமடைந்தது. இதை சீரமைக்கும் பணிக்காக நேற்று முன்தினம் காலை முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பாசன உதவியாளர் அடங்கிய குழுவினர், உடைந்த கம்பிகளை வெல்டிங் இயந்திரம் மூலம் நேற்று இணைக்கும் பணி துவங்கியது. இதனால், 17வது நாளாக நேற்றும் தடை நீட்டிக்கப்பட்டது.
இன்று முதல் அனுமதி
* சேதமடைந்த தடுப்பு கம்பி சீரமைப்பு பணி நேற்று மாலையுடன் முடிந்த நிலையில், கொடிவேரி தடுப்பணையில், இன்று காலை, 8:00 மணி முதல், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என நீர் வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.