ADDED : ஜன 21, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: 'ப.வேலுார், திருச்செங்கோடு தாலுகா பகுதியில் இலவச வீட்டு-மனை வழங்க வேண்டும்' என, திருநங்கைகள், நாமக்கல் கலெக்-டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள், ப.வேலுார், திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 2024 செப்., 2ல், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்தோம்.
இதையடுத்து, 30 நாட்களில் ஏற்பாடு செய்து தருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த தகவலும் இல்லை. திருநங்கைகளான எங்களுக்கு, இலவச வீட்டு மனையை, ப.வேலுார்,
திருச்செங்-கோடு தாலுகாவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.