sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கருவாட்டாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

/

கருவாட்டாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கருவாட்டாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கருவாட்டாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை


ADDED : டிச 13, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் பிரிவில் இருந்து பாலப்-பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், துாசூர் ஏரியில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் செல்லும் கருவாட்டாறு வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலின் குறுக்கே, 50ஆண்டுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் வழி-யாக, தண்ணீர் இல்லாத காலங்களில் இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், துாசூர் ஏரி நிரம்பி, ஆண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும்போது, இந்த வாய்க்காலில், 3 அடி முதல், 5 அடி உயரம் வரை தண்ணீர் செல்கிறது. அப்போது, அலங்காநத்தம் பிரிவில் இருந்து கொடிக்கால்புதுார், பொம்மசமுத்-திரம், பாலப்பட்டி பேன்ற கிராமங்களுக்கு செல்லும் கிராம மக்கள் துாசூர் வந்து, 7 கிலோ மீட்டர் துாரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது.மேலும், இந்த கிராமங்களில் இருந்து அலங்காநத்தம் அரசு பள்-ளிக்கு வரும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, தற்போது தரைப்பாலம் உள்ள கருவாட்டாற்றில் அரசு மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us