/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 13, 2025 05:53 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், குமா-ரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கிரீன் ஆப் பள்-ளிப்பாளையம் அறக்கட்டளை, தேசிய மாணவர் படை தேசிய பசுமைப்படை சார்பில், நேற்று 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
இதையடுத்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்-றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மஞ்சள் பை பயன்பாடு அவசியம், சுற்றுச்சூழல் பாது-காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.குமராபாளையம் தாசில்தார் பிரகாஷ், பள்ளிப்பாளையம் நக-ராட்சி கமிஷனர் தயாளன், கிரீன் ஆப் பள்ளிப்பாளையம் அறக்-கட்டளை நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாண-வர்கள் கலந்துகொண்டனர்.

