/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்டாங்கி ஆற்றை துார்வார கோரிக்கை
/
வெண்டாங்கி ஆற்றை துார்வார கோரிக்கை
ADDED : ஜன 20, 2025 07:00 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர், நக்கை ஆறு வழியாக காரவள்ளி அடிவார பகுதியில் இருந்து வெண்டாங்கி ஆற்றின் வழியாக துத்திக்குளம், ஏரிக்கு செல்லும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது. கொல்லிமலையில் ஆண்டுதோறும் பெய்யும் மழையால், இந்த வெண்டாங்கி ஆற்றில் சிறிதளவு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்து, விவசாயிகள் அடிவார பகுதியில் பாக்கு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கொல்லிமலையில் பெய்த கனமழையால் வெண்டாங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், வெண்டாங்கி ஆறு பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்ததால், பல இடங்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. எனவே, இந்த வெண்டாங்கி ஆற்றை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.