/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில் மரகதலிங்க தரிசன நேரம் நீட்டிக்க கோரிக்கை
/
திருச்செங்கோட்டில் மரகதலிங்க தரிசன நேரம் நீட்டிக்க கோரிக்கை
திருச்செங்கோட்டில் மரகதலிங்க தரிசன நேரம் நீட்டிக்க கோரிக்கை
திருச்செங்கோட்டில் மரகதலிங்க தரிசன நேரம் நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஜன 08, 2025 06:49 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், அர்த்தநாரீஸ்வரர் மூலவர் வெண் பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள், செங்கோட்டுவேலவர் என, முருகனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. பார்வதி தேவி, கேதார கவுரி விரதமாக மரகத லிங்கத்தை பூஜித்து, இடப்பாகம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த சிறப்பு பெற்ற மரகத லிங்கத்தை, பக்தர்கள் தரிசிக்க மார்கழி மாதம் முழுவதும், அதிகாலை, 4:00 மணி முதல் காலை, 7:00 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜன., 1ல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், காலை, 9:00 மணி வரை மரகத லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நெருங்குவதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளனர். எனவே, மரகதலிங்க தரிசன நேரத்தை மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை, 4:00 மணி முதல், 9:00 மணி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.