sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பீஹாரை போல் தமிழகத்தில் வெற்றிபெற எம்.எஸ்.பி.,யை செயல்படுத்த கோரிக்கை

/

பீஹாரை போல் தமிழகத்தில் வெற்றிபெற எம்.எஸ்.பி.,யை செயல்படுத்த கோரிக்கை

பீஹாரை போல் தமிழகத்தில் வெற்றிபெற எம்.எஸ்.பி.,யை செயல்படுத்த கோரிக்கை

பீஹாரை போல் தமிழகத்தில் வெற்றிபெற எம்.எஸ்.பி.,யை செயல்படுத்த கோரிக்கை


ADDED : நவ 24, 2025 01:25 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொட்களுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலை, எம்.எஸ்.பி.,யை மத்திய அரசு விரைவில் அறிவித்து, நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்' என, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கோவையில், கடந்த, 19ல் நடந்த தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டிற்கு, பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, 'பீஹார் மாநிலத்தில் முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றததைபோல், தமிழகத்-திலும், வரும், 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறுவது போல் அலை வீசுகிறது' என, பேசினார்.

அவரது பேச்சு, மாநாட்டில் பங்கேற்ற தென்னிந்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கிய பேசு பொருளாக பார்க்-கப்பட்டது.

பீஹார் மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதைபோல், தமிழகத்தில், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்-தலில் வெற்றி அலை வீச வேண்டும் என்றால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான, விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொட்களுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலை, எம்.எஸ்.பி.,யை மத்திய அரசு விரைவில் அறி-வித்து, நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும், 'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்' என கூறியதுபோல், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு பெறு-வதற்கு உண்டான நடைமுறை சாத்தியக்கூறுகளை காலம் தாழ்த்-தாமல் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில், பீஹார் மாநி-லத்தில் வெற்றி பெற்றதைபோல், தமிழகத்திலும், தமிழக விவசா-யிகள் வெற்றிபெற வைப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us