/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூசைட்' பாயின்டாக மாறும் பாலம் கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்
/
சூசைட்' பாயின்டாக மாறும் பாலம் கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்
சூசைட்' பாயின்டாக மாறும் பாலம் கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்
சூசைட்' பாயின்டாக மாறும் பாலம் கம்பிவேலி அமைக்க வேண்டுகோள்
ADDED : அக் 04, 2025 01:25 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் காவிரி பாலம், 'சூசைட்' பாயின்டாக மாறி வருவதால், பாதுகாப்பு சுவரில் கம்பி வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல்-ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த புதியபாலத்தின் பக்கவாட்டில், பாதுகாப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு சுவர் உயரம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் உள்ளவர்கள், இந்த பாலத்திற்கு வந்து பாதுகாப்பு சுவரில் ஏறி, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.
சில ஆண்டாக இந்த பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளுவது அதிகரித்து வருகிறது.எனவே, தற்கொலையை தடுக்கும் வகையில், பாலத்தின் பாதுகாப்பு சுவருக்கு மேலே, 6 அடிக்கு பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என, இரண்டு ஆண்டாக பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இனிமேலும் அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல், பாலத்தின் பாதுகாப்பு சுவரில் கம்பி வேலி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.