/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மீது வேன் மோதி கூலித்தொழிலாளி பலி
/
டூவீலர் மீது வேன் மோதி கூலித்தொழிலாளி பலி
ADDED : அக் 04, 2025 01:23 AM
பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, களியனுாரை சேர்ந்தவர்கள் சக்திவேல், 50; கூலித்தொழிலாளி; ஈஸ்வரன், 65; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இருவரும், நேற்று காலை, 5:30 மணிக்கு, சில்லங்காடு பகுதியில் உள்ள டீ கடைக்கு, டூவீலரில் சென்றனர். அங்கு டீ குடித்துவிட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மூலப்பட்டறை பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த, 'டாடா ஏசி' சரக்கு வாகனம் டூவீலர் மீது மோதியது.
இதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஈஸ்வரன், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிப்பாளையம் போலீசார், விபத்து ஏற்படுத்திய, சரக்கு வேன் டிரைவரான, ஈரோட்டை சேர்ந்த ரமேஷ், 42, என்பவரை கைது செய்து விசாரித்து
வருகின்றனர்.