ADDED : அக் 04, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, காந்தி ஜெயந்தியையொட்டி, கடந்த, 2ல் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எருமப்பட்டி அருகே, பண்ணைக்காரன்பட்டி கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து சென்றபோது, தேவராயபுரத்தை சேர்ந்த சிவக்குமார், 43, என்பவர் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தானர்.