/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2025 06:54 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வழியாக காளப்பநாய்க்கன்பட்டிக்கு, இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் உள்-ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, தினமும் நாமக்கல் நகருக்கு கட்டட தொழிலாளர் முதல் அலுவலக பணியாளர் வரை, ஏராள-மானோர் பஸ்சில் சென்று வருகின்றனர். அரசு போக்குவரத்துக்க-ழகம் சார்பில், இரனவு, 12:00 மணி வரை அரசு பஸ்கள் இயக்கப்-பட்டு வந்தன. இதில், ஏராளமான கூலித்தொழிலாளர்கள் பயன-டைந்து வந்தனர்.
கொரோனா ஊரடங்கிற்கு பின், கடைசி பஸ்சாக, 11:30 மணிக்கு பேளுக்குறிச்சி வரை சென்று வந்தது. அதன்பின் அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது. தற்போது, இரவு, 10:00 மணிக்கு பேளுக்குறிச்சி விழியாக மேலப்பட்டி வரை செல்லும், 14ம் நெம்பர் பஸ் மட்டுமே சேந்தமங்கலம் வரை இயக்கப்பட்டு வரு-கிறது. இந்த பஸ்சில் கூலி தொழிலாளர்கள் முதல் முதியவர்கள் வரை நிற்ககூட இடமின்றி செல்லும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து துறையினர், காளப்பநாய்க்கன்பட்டிக்கு இரவு நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்-துள்ளனர்.