/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
/
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 13, 2025 04:14 AM
நாமக்கல்: 'நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் குறித்து தவறான தகவல்களை பரப்புவோரை கைது செய்ய வேண்டும். 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, நாமக்கல் தெற்கு மாவட்ட, கொ.ம.தே.க., வர்த்தக பிரிவு செயலாளர் இளங்-கோவன் தலைமையில், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்-தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொ.ம.தே.க., நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளரும், நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான மாதேஸ்வரனின் நற்பெயரை கலங்கப்படுத்தும் நோக்கத்தில், சிலர் தவறான தக-வல்களை பரப்பி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மாற்று கட்சியை சேர்ந்த சிலர் இது குறித்து போஸ்டர்களை அச்சடித்து ஒட்டியுள்ளனர். மேலும், சமூக வலைதளத்தில் மாதேஸ்வரன் எம்.பி., மீது தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்-றனர்.
கடந்த, 9 நள்ளிரவு, 12:00 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், பொட்டணம் கிராமத்தில் உள்ள, எம்.பி., மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில், மர்மமான முறையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில், அவரது தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் எம்.பி., குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், தகவல்களை வெளியிட்டு வரும் மாற்றுக்-கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். எம்.பி., மாதேஸ்வரனுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.