/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'டிபாசிட்' பணம் ரூ.7.34 லட்சம் மோசடி நிதி நிறுவனத்திடம் இருந்து மீட்க கோரிக்கை
/
'டிபாசிட்' பணம் ரூ.7.34 லட்சம் மோசடி நிதி நிறுவனத்திடம் இருந்து மீட்க கோரிக்கை
'டிபாசிட்' பணம் ரூ.7.34 லட்சம் மோசடி நிதி நிறுவனத்திடம் இருந்து மீட்க கோரிக்கை
'டிபாசிட்' பணம் ரூ.7.34 லட்சம் மோசடி நிதி நிறுவனத்திடம் இருந்து மீட்க கோரிக்கை
ADDED : ஏப் 22, 2025 01:40 AM
நாமக்கல்:
எருமப்பட்டி அடுத்த கெஜகோம்பையை சேர்ந்த தம்பதியர் சரவணன், ரம்யா; இவர்கள் இருவரும், நாமக்கல் - துறையூர் சாலையில், சில ஆண்டுகளுக்கு முன், 'டிரான்சிட்டி பெனிபிட் பண்ட் இந்தியா' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இங்கு, பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர்.
அவற்றை நம்பி, 300க்கும் மேற்பட்டோர், 50,000 முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியர், 2021ல், நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். இருந்தும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, பணத்தை இழந்தவர்கள், நாமக்கல் கலெக்டரிடம், பணத்தை பெற்றுத்தரும்படி மனு அளித்தனர்.
இதுகுறித்து, சேந்தமங்கலம், பா.அலங்காநத்தத்தை சேர்ந்த முருகேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியதால், 'டிரான்சிட்டி பெனிபிட் பண்ட் இந்தியா' நிறுவனத்தில், ஏழு லட்சத்து, 52,120 ரூபாய் டிபாசிட் செய்தேன். அதில், 18,000 ரூபாய் வட்டித்தொகை வழங்கினர். அதன்பிறகு, முதலீட்டு பணத்தையும், வட்டியும் தராமல் தலைமறைவாகிவிட்டனர். என்னிடம் மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.