ADDED : நவ 10, 2025 01:50 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், துாசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, கொல்லிமலையில் பெய்யும் கனமழையால், இரண்டு ஆண்-டுகளாக நிரம்பி வருகிறது. இதனால், அலங்காநத்தம், துாசூர், பாலப்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஏரியில், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை சார்பில், பல லட்சம் செலவில், ஏரியில் இந்த கருவேல மரங்களை வேறுடன் அகற்ற நடவ-டிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், மரங்கள் வெட்டிய, இரண்டு மாதத்தில் மீண்டும் ஏரி முழுவதும் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த, இரண்டு ஆண்டு க-ளாக கருவேல மரங்களை மூடிய அளவிற்கு தண்ணீர் இருந்-ததால், ஏரியில் உள்ள மரங்கள் அனைத்தும் தற்போது காய்ந்துள்-ளன.
இதனால் இந்த ஏரியில் தண்ணீர் குறையும் பகுதியில் உள்ள காய்ந்த கருவேல மரங்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் மேலும் கருவேலம் மரங்கள் முளைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

