/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்
/
பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 22, 2025 02:12 AM
மல்லசமுத்திரம் மல்லசமுத்திரம் அருகே, கோப்பம்பட்டி பஸ் ஸடாப், ராசிபுரம்-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும், 300க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் என ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு,
பள்ளிப்பாளையம், ஈரோடு, சேலம் என பல்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாகவும், பள்ளி கல்லுாரிகளுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சிலர், மயக்கமடைகின்றனர்.இதுவரை இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.