/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அசுர வேக வாகனங்களால் விபத்துவேகத்தடை அமைக்க கோரிக்கை
/
அசுர வேக வாகனங்களால் விபத்துவேகத்தடை அமைக்க கோரிக்கை
அசுர வேக வாகனங்களால் விபத்துவேகத்தடை அமைக்க கோரிக்கை
அசுர வேக வாகனங்களால் விபத்துவேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : டிச 19, 2024 01:24 AM
மோகனுார், டிச. 19-
'அசுர வேக வாகனங்களால், பள்ளி மாணவியர் பீதியில் சாலையில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் - நாமக்கல் சாலை, காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அருகே, அரசு மாதிரி மகளிர் மேல்
நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். நாமக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ள இப்பள்ளியில், காலை, மாலை நேரத்தில், இவ்வழியாக டூவீலர், கார், வேன், லாரி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
அசுர வேக வாகனங்களால், மாணவியர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மோகனுார் - வாங்கல் காவிரி பாலம் திறக்கப்பட்டதற்கு பின், இவ்வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி முன் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினரோ, மாவட்ட நிர்வாகமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

