sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை

/

5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை

5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை

5 ஆண்டுக்கு ஒருமுறை மானியத்தில் சொட்டுநீர் குழாய் வழங்க கோரிக்கை


ADDED : பிப் 16, 2025 03:46 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், பரமத்தி வேலுார், சேந்-தமங்கலம், மோகனுார் உள்ளிட்ட யூனியன்களில், சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். வெள்ளை கிழங்கு, முள்வேலி என, இரண்டு ரகங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது.

மிகக்குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர் என்பதால், விவசா-யிகள் இந்த மரவள்ளிக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மர-வள்ளி செடிகள், பாத்திகள் அமைத்து தண்ணீர் பாய்ச்சினால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மத்திய, மாநில அர-சுகள் வழங்கும், 95 சதவீத மானியத்தில், 7 ஆண்டுக்கு ஒரு-முறை சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி நடவு செய்யப்ப-டுகிறது.

ஆனால், இந்த சொட்டுநீர் குழாய்கள், 5 ஆண்டுகள் கூட பயன்-படுத்த முடியாமல் போவதால், விவசாயிகள் பணம் கொடுத்து மீண்டும் சொட்டுநீர் குழாய்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மானிய விலையில், 5 ஆண்டுக்கு ஒருமுறை செட்-டுநீர் குழாய்கள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, புதுச்சத்திரத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி கூறிய-தாவது:

சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளோம். கடந்த, 2019ல், ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு மானியத்தில் மரவள்ளி பயி-ரிட ‍சொட்டுநீர் குழாய்கள் கொடுத்தனர். ஆனால், 5 ஆண்டுகள் கூட முடியாத நிலையில், குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வரவில்லை. எனவே, அரசு, 5 ஆண்டுகள் முடிந்த மர-வள்ளி விவசாயிகளுக்கு, சொட்டுநீர் குழாய்கள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us