/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்ச் கதவு, சிலுவை உடைப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
சர்ச் கதவு, சிலுவை உடைப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சர்ச் கதவு, சிலுவை உடைப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சர்ச் கதவு, சிலுவை உடைப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 30, 2025 01:11 AM
நாமக்கல்,'ஆலயத்தின் கம்பி கேட், பொருட்களை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராசிபுரம் தீர்க்கதரிசன தேவசபையை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரத்தில், தீர்க்கதரிசன தேவசபை உள்ளது. கடந்த, 20ல், -ஆராதனை செய்ய தேவாலயத்திற்கு வந்தபோது, எங்களுடைய ஆலயத்தின் கம்பி கதவு பிடுங்கப்பட்டு, வேறு ஒரு கம்பி கேட் போடப்பட்டிருந்தது. மேலும், ஆலயத்தின் கோபுரத்தில் இருந்த சிலுவை பிடுங்கி உடைக்கப்பட்டிருந்தது. எங்கள் தேவாலயத்திற்கு பாதுகாப்பும், நாங்கள் இழந்து போன பொருட்களை மீட்டு தருவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.