/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பதிவு தபால் சேவையை ரத்து செய்யாமல் தொடரணும்: மத்திய அரசுக்கு கோரிக்கை
/
பதிவு தபால் சேவையை ரத்து செய்யாமல் தொடரணும்: மத்திய அரசுக்கு கோரிக்கை
பதிவு தபால் சேவையை ரத்து செய்யாமல் தொடரணும்: மத்திய அரசுக்கு கோரிக்கை
பதிவு தபால் சேவையை ரத்து செய்யாமல் தொடரணும்: மத்திய அரசுக்கு கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 08:49 AM
நாமக்கல்: விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், மத்திய தகவல் துறை அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:இந்திய தபால்துறை பல்வேறு சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. சிறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, தந்தி சேவை கைவிடப்பட்டது. தற்போது, 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவையை ரத்து செய்து, வரும், செப்., 1 முதல், விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் அத்தியாவசியமான சேவையாக பதிவு தபால் சேவை செயல்பட்டு வருகிறது.
அவற்றை ரத்து செய்யும்போது, கிராமப்புறங்களில் விரைவு தபால் சேவை அனைவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதனால், ஏற்கனவே இருக்கின்ற பதிவு தபால் சேவையை அனைத்து பகுதிகளிலும் எவ்வாறு செயல்படுகிறதோ, அதேபோல் மீண்டும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான தபால் சேவையில் முடக்கம் ஏற்படும். மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி, இந்த திட்டத்தை கைவிடுமாறும், விரைவுதபால் சேவைக்கு பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணம் செலவாகும் என்பதால், அவற்றை மனதில் வைத்து, திட்டம் உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.