/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தில் டூவீலரை எடுத்து சென்றதால் சாலை மறியல்: மோகனுாரில் 'டிராபிக்'

ADDED : ஆக 04, 2025 08:49 AM
மோகனுார்: மோகனுாரை சேர்ந்தவர் பாலுசாமி, 54; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு, தன் டூவீலரில், தீர்த்தாம்பாளையத்தில் நடக்கும் கோவில் மண்டல பூஜைக்கு மாலை வாங்கிக்கொண்டு சென்றார். அதேபோல், மணப்பள்ளியை சேர்ந்த திவாகர், 27, என்பவர், மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் பைக்கில் மோகனுார் நோக்கி வந்தார்.
அப்போது, தீர்த்தாம்பாளையம் பிரிவு சாலை அருகில், இரண்டு டூவீலர்களும் மோதி விபத்துக்குள்ளானது. அதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அங்கு வந்த திவாகரின் நண்பர்கள், பாலுசாமியின் டூவீலரை எடுத்துச்சென்றுவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாலுசாமி மற்றும் உறவினர்கள், கணேசபுரம் பகுதியில், இரவு, 7:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். மோகனுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், மோகனுார் - ப.வேலுார் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.