/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் குரங்கு தொல்லை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
/
ராசிபுரத்தில் குரங்கு தொல்லை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ராசிபுரத்தில் குரங்கு தொல்லை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ராசிபுரத்தில் குரங்கு தொல்லை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2025 01:27 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட, தியாகராஜ சுவாமி கோவில் தெரு, 15வது வார்டு பகுதியில் சில நாட்களாக, நான்கு குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள், சித்தர் மலை அடிவாரத்தில் இருந்து, உணவு தேடி வந்துள்ளன. நகர் பகுதிக்குள் நுழைந்த இந்த குரங்குகள், வெளியே காய வைத்திருக்கும் உணவு பொருட்களை திண்டு நாசம் செய்கின்றன. மேலும், வண்டிகளில் அமர்ந்து கொண்டு பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.
முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் குரங்குகளை கண்டு பயந்து ஓடுகின்றனர். குழந்தைகளின் கையில் உள்ள தின்பண்டங்களை துரத்தி பிடுங்க வருகின்றன. இதனால் குழந்தைகள் அலறுகின்றனர். டீ, மளிகை கடைகளில் புகுந்து உணவு பொருட்களை துாக்கி செல்கின்றன.
பொதுமக்கள் விரட்டினால், உயரமான மொட்டை மாடி பகுதிகளுக்கு சென்று தஞ்சடைகின்றன. அவர்கள் சென்றதும், மீண்டும் கீழே இறங்கி உணவு பொருட்களை தேடி அழைகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

