/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுபாட்டில் பதுக்கிய 2 பேருக்கு 'காப்பு'
/
மதுபாட்டில் பதுக்கிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : மார் 05, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கொண்டம்பட்டி பகுதியில் ரேவதி, 50, என்பவரது வீட்டில், 30 மது பாட்டில்களும், சிவியாம்பாளையத்தை சேர்ந்த ராமர், 45, என்பவரின் வீட்டில், 25 மது பாட்டில்களும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.