/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுசேமிப்பு துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க தீர்மானம்
/
சிறுசேமிப்பு துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க தீர்மானம்
சிறுசேமிப்பு துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க தீர்மானம்
சிறுசேமிப்பு துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க தீர்மானம்
ADDED : ஆக 19, 2024 05:54 AM
நாமக்கல்: ''சிறுசேமிப்பு துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க வேண்டும்,'' என, மாநில, மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் சார்பில், ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், நாமக்கல் அடுத்த கீரம்பூர் டோல்-கேட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜிவெங்கடேசலு தலைமை வகித்தார். துணைத்தலைவர் வேலுசாமி வரவேற்றார். தமிழக சிறு சேமிப்புத்துறை துணை இயக்குனர் பாலமுருகன், கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், எஸ்.ஏ.எஸ்., சிறுசேமிப்பு முகவர்களுக்கு மீள ஒரு சதவீதம் தரகு தொகை வழங்க வேண்டும். அஞ்சலக சிறுசே-மிப்பு முகவர்கள் முகவாண்மை புதுப்பித்தலின் போது, காவல் துறை சான்று பெறும் வழிமுறைகள் எளிமையாக்க வேண்டும். சிறுசேமிப்பு துறைக்கு தனியே துறைத்தலைவர் நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.