/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
22ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தீர்மானம்
/
22ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தீர்மானம்
22ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தீர்மானம்
22ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தீர்மானம்
ADDED : ஆக 04, 2025 09:03 AM
நாமக்கல்: 'தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 22ல், சென்னையில் நடக்கும் கோட்டை முற்றுகை போராட்டத்தில், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்' என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ-ஜாக்) சார்பில், கோட்டை முற்றுகை போராட்ட ஆயத்த கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன், அண்ணாதுரை, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் விளக்கி பேசினர்.கூட்டத்தில், தமிழகத்தில், புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான சம்பளம் இடைநிலை, சாதாரண நிலை ஆசிரியருக்கு வழங்கவேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 22ல், சென்னையில் நடக்கும் கோட்டை முற்றுகை போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.