/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் கழிவு கலப்பதை தடுக்க தடுப்பு சுவர்

ADDED : அக் 19, 2024 01:05 AM
சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில்
கழிவு கலப்பதை தடுக்க தடுப்பு சுவர்
சேந்தமங்கலம், அக். 19
சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகில் உள்ள தெப்பக்குளம், 40 ஆண்டாக மாசடைந்து கழிவு நீர் குட்டையாக மாறி இருந்தது. டவுன் பஞ், நிர்வாகம், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி மழைநீர் நிரப்ப நடவடிக்கை எடுத்தது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் குளத்திற்கு கழிவு நீர் வரும் வாய்க்கால் மணல் மூட்டைகளை வைத்து மூடப்பட்டது. இந்த மணல் மூட்டைகளை மர்ம நபர்கள் அகற்றி மீண்டும் கழிவு நீர் குளத்துக்கு செல்லும் வகையில் பாதை அமைத்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கழிவு நீர் வரும் இடத்தில் மணல் மூட்டைகளுக்கு பதிலாக, 6 அடி உயரத்திற்கு சுவர் அமைத்து கழிவு நீர் வராத வகையில் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.