/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 06, 2024 08:18 AM
நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் குமரேசன், அர்த்தனாரி ஆகியோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை, பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பதவியிறக்கம் பெற்ற வருவாய்துறையினருக்கு இடையூறுகளின்றி மீண்டும் பணி வழங்க வேண்டும்.
அடிக்கடி இடமாற்றம் செய்வதை தவிர்த்து, ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மாறுதல் அளிக்க வேண்டும். சென்னையில் நடைபெறும் சங்க வைரவிழா கொண்டாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வருவாய்துறை அலுவலர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.