/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : அக் 16, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், :நாமக்கல்லில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முருகையன் பங்கேற்றார்.
கூட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப்பேசி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் காலியாக உள்ள மாவட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.